கணவன் கொலை – சட்டத்தரணி கைது !!
கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபர், குடும்ப தகராறு காரணமாக அமிலத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண், சட்டத்தரணி என தகவல் வெளியாகியுள்ளது.
38 வயதுடைய பெண், அவரது 64 வயதுடைய சிறிய தந்தை மற்றும் 36 வயது சகோதர் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தனது கணவர் தனக்குத்தானே அமிலத்தை ஊற்றிக் கொண்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணியான பெண் தெரிவித்துள்ளார்.
அமிலத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.