மனுஷ நாணயக்கார விடுத்துள்ள கோரிக்கை!!
மின்சாரக் காரை இறக்குமதி செய்ய தனி நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் வேளை இலங்கைக்கு டொலர்களை அனுப்பும் வெளிநாட்டவர்களுக்காக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.