முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரப்பட்டது.
தமிழரசு கட்சியை உருவாக்க பங்களித்த முக்கியஸ்தரில் ஒருவராக விளங்கிய மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் கு.வன்னிய சிங்கத்தின் 53 வது நினைவு தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோரால் நினைவு கூரப்பட்டது.
குறித்த நினைவு தின நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.