ராகுல் காந்தி பாத யாத்திரைக்காக வியாபாரிகளை மிரட்டி பணம் கேட்ட காங்கிரசார் சஸ்பெண்டு..!!
கேரளாவில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரைக்காக அம்மாநில காங்கிரசார் பல்வேறு பகுதிகளிலும் நன்கொடை வசூலித்து வருகிறார்கள். இதில் கொல்லத்தில் சில காங்கிரசார் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்ததாக புகார் கிளம்பியது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இது பற்றி கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறியதாவது:- பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிப்பது காங்கிரசின் கலாச்சாரம் கிடையாது. சில தொண்டர்கள் நன்கொடை வசூலித்தபோது வியாபாரிகளிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நான் விசாரணை நடத்தி வருகிறேன். புகாருக்கு உள்ளான 3 தொண்டர்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.