;
Athirady Tamil News

போக்குவரத்து செலவை குறைக்கும் தேசிய தளவாடக்கொள்கை; பிரதமர் மோடி வெளியிட்டார்..!!

0

போக்குவரத்து செலவை குறைக்கும் நோக்கத்துடன் கூடிய தேசிய தளவாடக்கொள்கையை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.போக்குவரத்துக்கான செலவினை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தேசிய தளவாட கொள்கையை டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

தேசிய தளவாடக்கொள்கையானது, போய்ச்சேர வேண்டிய வினியோகத்தை விரைவுபடுத்துவதையும், தொழில் நிறுவனங்கள் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.இது தளவாடத்துறையில் உள்ள சவால்களைத் தீர்க்கும். பிரதம மந்திரி கதி சக்தி திட்டத்துடன் சேர்ந்து உள்கட்டமைப்பு பெருக்கத்துக்கானது.இது போக்குவரத்து செலவுகளை குறைக்கும். இந்திய தயாரிப்புகள் உலகச்சந்தையைப் பிடிக்க, நாடு அதன் ஆதரவு அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

தேசிய தளவாடக்கொள்கையானது ஆதரவு அமைப்பை நவீனமாக்க உதவுகிறது. இந்தியா வலிமைவாய்ந்த ஜனநாயகமாக உருவாகி வருகிறது என்று உலகளாவிய நிபுணர்கள் கூறுகிறார்கள். நமது உறுதிப்பாட்டையும், படிப்படியான முன்னேற்றத்தையும் அவர்கள் பாராட்டுகிறார்கள். தளவாட துறையை வலுப்படுத்துவதற்கு நமது அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. சுங்கத்துறையில் முகமில்லா அளவீடு முறை வந்துவிட்டது. மின்னணு வழிச்சீட்டுகள் வந்து விட்டன.

தளவாடத்துறையில் பாஸ்டேக் முறை செயல்திறனைக் கொண்டு வருகிறது. இந்தியா, உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உற்பத்தி மையமாக உருவாகி வருகிறது.உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை முறையை அரசு அறிவித்ததை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.