இந்தியா- ஜப்பான் இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி நிறைவு..!!
இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜிமெக்ஸ் 22, கடல் சார் பயிற்சி வங்கக் கடலில் ஒரு வார காலம் நடைபெற்றது. இரு தரப்பும் மேம்பட்ட நிலையிலான நீர் மூழ்கி எதிர்ப்புப் போர், துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டன.
இந்தப் பயிற்சியில் கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டன. அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையிலான இந்திய கடற்படைக் கப்பல்கள், கிழக்கு கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கமாண்டிங் ரியர் அட்மிரல் ஹிராடா தோஷியுகி தலைமையிலான இசுமோ மற்றும் டகானாமி கப்பல்கள் பயிற்சிகளை மேற்கொண்டன. நேற்றுடன் அந்த பயிற்சி முடிவுக்கு வந்தது.
2012 ஆண்டு தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் கடற்சார் பயிற்சியின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதன்மையை ஒருங்கிணைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.