ஜீரணத்தை தூண்டும் சின்ன வெங்காயம்!! (மருத்துவம்)
சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், மினரல், வைட்டமின், இரும்புச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது. சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தக்குழாயினை அடைக்கும் கொழுப்பு கரைந்து இதய நோய் வராமல் தடுக்கும். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறு குடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. மேலும் பல நன்மைகள் இதில் அடங்கியுள்ளது.
*சின்ன வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
*வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெயை கலந்து தடவினால், வலி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
*வெங்காயச் சாற்ேறாடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி குடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும்.
*வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
*வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சின்ன வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாக பயன்படுத்தலாம்.
*தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்தால் முடி வளரும்.
*வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி. நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.