பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி.!! (வீடியோ, படங்கள்)
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோதே இந்நிகழ்வு இடம்பெற்றது.
சபை அமர்வின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், எலிசபெத் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றியும் எடுத்துக் கூறினார். அத்துடன் அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதுபோல் கல்முனை மாநகர சபையின் மறைந்த உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களுக்கும் இதன்போது 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”