திருப்பதியில் 6 லட்சம் நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரும் நவம்பர் மாதத்திற்கான 6 லட்சம் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. இதேபோல் ஆர்ஜித சேவை, கல்யாணம் உற்சவம், சகஸ்ஹர தீப அலங்கார சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கான அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுவதால் 1 முதல் 5-ந் தேதி வரை அங்க பிரதட்சன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் நேற்று 73,186 பேர் தரிசனம் செய்தனர். 27,365 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.