;
Athirady Tamil News

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் வெங்கட ரமணரெட்டி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:- போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதாரண நாட்களில் இயக்கப்படும் பஸ்களைவிட இரு மடங்கு பஸ்களை இயக்க வேண்டும் என்றார். அதற்கு திருமலைக்கு 350 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரி தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து 150 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் எனவும் சென்னை, வேலூரில் இருந்து தலா 40 பஸ்கள் கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் பேசிய கலெக்டர் போக்குவரத்து கழகம், காவல்துறையுடன் ஒருங்கிணைந்து போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். மருத்துவ முகாம்கள், நடமாடும் குழுக்கள் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, காவல்துறை, வருவாய்த்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மற்றும் இதர அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முதல்-அமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி வருகிற 27-ந்தேதி திருமலைக்கு வருவதால் திருப்பதி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலைகளை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கருட சேவை நாளில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புடன் பணிகளை சிறப்பாக செய்து பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.