அவுஸ்திரேலியாவிடமிருந்து 600 மெட்ரிக் டன் அரிசி நன்கொடை!!
அவுஸ்திரேலிய நன்கொடையின் முதற் தொகுதி பொருட்கள் இலங்கைக்கு வந்துள்ளன.
600 மெட்ரிக் டன் அரிசி கொண்ட இந்த சரக்கு, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடையில் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் இந்த நன்கொடையின் மூலம், கர்ப்பிணிகள் , பாலூட்டும் பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் நன்மை அடைவார்கள் என உலக உணவுத் திட்டம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் , இலங்கையின் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்துள்ளதுடன் சமீபத்திய WFP ஆய்வுகள் அவசர உதவியின்றி எதிர்வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”