நீதிமன்ற கட்டளை வலுவற்றதா?:சிறிதரன் கேள்வி !!
நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த பிக்குவும் தொல்பொருள் திணைக்களமும் அடாத்தாக கட்டுமானம் செய்ய முடியுமா? அப்படி என்றால் நீதிமன்றத்தின் கட்டளை என்பது இந்த நாட்டில் வலுவற்றதா? என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினை பௌத்த பேரினவாதம் ஆக்கிரமித்து நீதிமன்ற கட்டளையினை மீறி பாரிய விகாரை அமைக்கும் பணியினை தமிழ் மக்கள் எதிர்கின்றார்கள் பல நாட்களாக தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றார்கள்.
ஆனால், சிங்கள பேரினவாத அரசு வெறித்தனமாக தமிழர்களின் நிலங்களை பறிப்பதற்காகவும் ஆக்கிரமிப்பதற்காகவும் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகவும் பல இடங்களில் சின்ன சின்ன விஹாரைகளை அமைத்தல் விஹாரைகளுக்கு அண்மைய பகுதிகளை விகாரைகளுக்கு சொந்தமான நிலங்களாக மாற்றுகின்ற விடையங்களை கையாண்டு வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலை முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையில் இணைப்பு பகுதிகளை பிரித்தாளும் கங்கரியம் குருந்தூர் மலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
ஏற்கெனவே இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு எம்.ஏ.சுமந்திரனால் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டளை இருக்கின்றது இந்த இடங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நீதிமன்றங்கள் செயலிழந்து போய் இருக்கின்றது நீதிமன்ற கட்டளையினை மீறி பௌத்த பிக்குவும் தொல்பொருள் திணைக்களமும் அடாத்தாக செய்யமுடியுமா அப்படி என்றால் நீதிமன்றத்தின் கட்டளை என்பது இந்த நாட்டில் வலுவற்றதாக என்ற கேள்வி எழுந்துள்ளது நீதிமன்றங்களுக்கும் நீதிக்கும் இடமில்லாத முறையில் அடத்தாக இந்த இடங்களை பிடித்து சிங்கள ஆக்கிரமிப்பு செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தொல்பொருள் திணைக்கள அமைச்சர் விதுர விக்கரமநாயக்க அவர்களை நானும் சாள்ஸ் நிர்மலநாதனும் நேற்றைய தினம் சந்தித்து 632 ஏக்கர் மக்களின் நிலப்பரப்பு தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்படுகின்றது அளக்கப்பட இருக்கின்றது என்று சொல்லி இருந்தோம் தனக்கு இந்த விடயம் தெரியாது என்று சொல்லி இருந்தார்
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் தொலைபேசியிலே எடுத்து இதனை நிறுத்துமாறு கூறியிருந்தார் அதையும் மீறி எதுவும் நடக்குமா என்று பார்ப்பதற்கு வந்திருந்தோம் நில அளவீட்டு பணி நிறுத்தப்பட்டிருக்கின்றது ஆனால் நம்பக் கூடியவகையில் இல்லை நீதிமன்ற கட்டளையினை மீறி கட்டம் கட்டலாம் என்றால் இவர்கள் எந்த நேரமும் ஒரு பௌத்த பிக்குவிற்கு பின்னால் அளக்கின்ற வேவையினை காணி பறிக்கின்ற வேலையினை செய்வார்கள்.
இதற்கு எதிராக தொடர் போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கின்ற அதே நேரம் சர்வதேச சமூகம் இலங்கையின் பொருளாதரம் வீழ்ந்திருக்கின்றது அழிந்துகொண்டிருக்கின்றது என்று பேசுகின்ற சமூகம் இங்கே நடக்கின்ற தமிழருக்கு எதிரான ஆக்கிரமிப்புக்களை கருத்தில் எடுக்கவேண்டும் இது தமிழர்களை இந்த மண்ணில் இல்லாமல் செய்வதற்கான சிங்களம் செய்கின்ற மிகப்பெரிய அபாயகரமான நடவடிக்கை இதற்கு எதிராக சர்வதேச சமூகம் தன்னுடைய குரல்களை அழுத்தங்களை கொடுக்கத்தவறினால் தமிழர்கள் இந்த நிலத்தில் இருந்து அழிக்கப்படுவார்கள் என்பதுதான் உண்மை.
அரசாங்கத்திற்கு நாங்கள் ஓர் எச்சரிக்கையினை முன்வைக்கின்றோம் இவ்வாறான நடவடிக்கையினை கைவிட்டு தமிழர்களின் நிலங்களை பறிக்கும் வேலையினை கைவிடுங்கள் இல்லை என்றால் ஒரு அபாயகரமான சூழலை நோக்கி இலங்கை நகரும் என்பதுதான் உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.