ரஷியாவுக்கு அணு ஆயுதங்கள் வழங்கவில்லை: வடகொரியா மறுப்பு..!!
ரஷியாவுக்கு நாங்கள் அணு ஆயுதங்களை வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், “நாங்கள் ஒருபோதும் ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களையோ, வெடி மருந்துகளையோ ஏற்றுமதி செய்யவில்லை. அணு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டமும் எங்களிடம் இல்லை. அமெரிக்கா வதந்திகளைப் பரப்புகிறது” என்று தெரிவித்துள்ளது.