ரஷியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்..!!
அண்மையில் ரஷிய தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன்.
பதிலடி கொடுக்க எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) உள்ளன. அவை நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை. எங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,வாஷிங்டனில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேசியதாவது:
ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் (ரஷியாவின்) இந்த பொறுப்பற்ற அணுசக்தி அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். அதிபர் புதின் தொடங்கிய பயங்கரத்தை நிறுத்தச் சொல்லுங்கள்.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக, ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவின் வலிமையான கண்டனங்களுடன் பிற நாடுகளும் சேர்ந்து ரஷியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.