;
Athirady Tamil News

பயனர்களுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் – உடனே பெறுவது எப்படி..!!

0

இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக பாரதி ஏர்டெல் விளங்குகிறது. 5ஜி சேவைகளை பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஏர்டெல் 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கி வருகிறது. பிரீபெயிட் பயனர்கள் மட்டும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும்.

ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பயனர்கள் ரிவார்டுகளை பெறுவது, மின் கட்டணம் செலுத்துவது, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியை இயக்குவது, மொபைல் ரிசார்ஜ் என ஏராளமான சேவைகளை பெறலாம். குறிப்பாக தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் 5 ஜிபி டேட்டா 1 ஜிபி வீதம் ஐந்து வவுச்சர்களாக வழங்கப்பட உள்ளன.

பாரதி ஏர்டெல் நிறுவனம் புதிய பிரீபெயிட் பயனர்களுக்கு 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குகிறது. இதற்கு பயனர்கள் புதிதாக ஏர்டெல் இணைப்பை பெற வேண்டும். அதன் பின் ஏர்டெல் தேங்ஸ் செயலியை இன்ஸ்டால் செய்து ஏர்டெல் மொபைல் நம்பர் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும்.

பின் செயலியின் மை கூப்பன்ஸ் பகுதியில் 5 ஜிபி டேட்டா வழங்கும் வவுச்சர்கள் மூலம் இலவச டேட்டாவை பெறலாம். புதிதாக ஏர்டெல் சேவையில் இணையும் பிரீபெயிட் பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் லாக்-இன் செய்ததும் இலவச டேட்டா வழங்கப்பட்டு விடும். இந்த இலவச டேட்டா ஐந்து வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படும். ஒவ்வொரு வவுச்சரிலும் 1 ஜிபி டேட்டா வழங்கும்.

இந்த வவுச்சர்களை 90 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி வெற்றிகரமாக மற்றவர்களையும் ஏர்டெல் சேவையில் இணைய வைக்கும் பட்சத்தில் ரூ. 100 வரை பெற முடியும். ஏர்டெல் தேங்ஸ் செயலியில் ஏர்டெல் பிரீபெயிட் சிம்-ஐ நண்பருக்கு பரிந்துரை செய்யும் இணைய முகவரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்டெல் சிம் வாங்க நண்பர் நீங்கள் அனுப்பிய இணைய முகவரியை பயன்படுத்தினால், ரூ. 100 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.