புதிய அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு கண்காணிப்பு விஜயம்!! (வீடியோ, படங்கள்)
புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்ற பின்னர் இன்று குறித்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட புதிய அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி அம்பாறை மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களின் பிரச்சினைகளை ஆராயும் முகமாக வருகை தந்த அவர் கல்முனை சம்மாந்துறை பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கும் விஜயம் செய்து குறைநிறைகளை ஆராய்ந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விஜயத்தின் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வைத்து கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டதுடன் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் கல்முனை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் கல்முனை பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .
குறித்த கண்காணிப்பு விஜயத்தின் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பிரிவு , சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு ,போக்குவரத்து பிரிவு , சிறு குற்றத்தடுப்பு பிரிவு ,பெருங் குற்றத்தடுப்பு பிரிவு ,சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவு, உள்ளிட்ட பல பிரிவுகள் தொடர்பான குறைநிறைகள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விஜயம் செய்த பின்னர் கடந்த காலங்களில் நிவர்த்தி செய்யப்படாமல் காணப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கான வளப்பற்றாக்குறைகள் எதிர்வரும் காலங்களில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”