பிரகடனப்படுத்த அதிகாரம் இல்லை !!
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் பிரிவு 2க்கு அமைய, பெரிய பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு நிலத்தையும், கட்டடத்தையும், கப்பல் அல்லது விமானத்தையும் தடைசெய்யப்பட்ட இடமாக பிரகடனப்படுத்த முடியும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பின் பல பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து, ஜனாதிபதியால் நேற்று (23) வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அது தொடர்பில் சங்கம், இன்று (24) வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.