“சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு”!! (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் “சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு” மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (24) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு ஒரு வருட காலத்தினை உள்ளடக்கியதாக இச் சிங்கள டிப்ளோமா கற்கைநெறி முன்னெடுக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது ” யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்களமொழியை கற்பதில் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் ஆர்வம்காட்டுகின்றார்கள். பல அரச திணைக்களங்களில் சிங்கள மொழிபெயர்ப்பாளர்களின் தேவை காணப்படுகிறது. இச் சிங்களமொழி டிப்ளோமா கற்கை நெறியின் மூலம் இத் தேவைகள் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந் நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரு.பிரசாத் ஆர் ஹேரத், மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், உதவி பணிப்பாளர் திருமதி.பி.பி.ரவிராஜ் (NILET), கற்கை மற்றும் ஆய்வு உத்தியோகத்தர் திருமதி.எல்.எம்.ஆர்.என். லன்சாகர(NILET), இணைப்பாளர் எச்.எ.எச்.ஹெரோசிமா பெரேரா(NILET) மற்றும் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட செயலக இணைப்பாளர் ( NILET),விரிவுரையாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”