யாழ், வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் புரட்டாதி சனி விரத பூசை வழிபாடு!! (படங்கள்)
யாழ்ப்பாணம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இன்றைய தினம் புரட்டாதி சனிவிரத பூசை ஆரம்பநிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்திற்குவருகை தந்து தமது பாவங்கள் தீர்வதற்கு பெருமாளுக்கு எள் எண்ணெய் சுட்டி எரித்ததோடு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் சிறப்பாக இடம்பெற்றது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும். இந்த ஆண்டு செப்டம்பர் 24, ஒக்டோபர் 1, ஒக்டோபர் 8, ஒக்டோபர் 15, ஆகிய திகதிகளில் 4 சனிக்கிழமை வருகிறது. இந்த 4 சனிக்கிழமைகளிலும் பெருமாளை வழிபாட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும். ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை விரதமாகும்.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். எனவே சனிக்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்பாடாது என்பதே ஐதீகமாகவுள்ளது. சனிக்கிழமையன்று விரதம் இருந்து பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த மாவிளக்கு ஏற்றி பூஜை செய்து பெருமாளை வழிபடவேண்டும்.
யாழ்ப்பாணத்திலுள்ள சிவன் ஆலயங்கள் மற்றும் பெருமாள் ஆலயங்களில் புரட்டாசி சனி வழிபாடுகள் விசேட பூஜைகள் அபிஷேகங்கள் தீபாராதனைகள் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”