;
Athirady Tamil News

ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் படங்களை டுவிட்டரில் வெளியிட்ட அரச குடும்பம்..!!

0

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு கடந்த 19-ந் தேதி லண்டனில் நடந்தது.

ராணி எலிசபெத்தின் உடல் விண்ட்சொர் மாளிகையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ மத தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் உடல் இறுதியாக ஓய்வெடுக்கும் புகைப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டது.

ராணி எலிசபெத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல் ஒன்று, மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நிறுவப்பட்டது.

செயின்ட் ஜார்ஜ் தேவாலயமானது செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள சிறிய பகுதி ஆகும்.

இந்த கல் கருப்பு பெல்ஜிய பளிங்கு கற்களால் ஆனது.

அவரது பெற்றோர், அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோருடைய பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி நாளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக இங்கிலாந்து கலாச்சாரத்துறை மந்திரி மைகில் டொனிலென் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி குதிரைகள் பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் வைத்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.பின்னர் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் இருந்து விண்ட்சார் கோட்டைக்கு ராணியின் உடல் எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்ட அடக்க பிரார்த்தனை நடந்தது.

இறுதியில் அங்கு ராணியின் கணவர் பிலிப்பின் கல்லறை அருகே ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.அங்கு ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, தரைக்கு கீழே உள்ள அறையில் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.