;
Athirady Tamil News

தள்ளுபடி செய்யுமாறு இலங்கை கோரிக்கை !!

0

இறையாண்மைப் பத்திரங்களை திருப்பிச் செலுத்தாததற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறுஅமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக நிதிச் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

நாடு கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறே இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு, கடந்த ஜூலை 25ஆம் திகதி முதிர்ச்சியடைந்த 250 மில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரங்களை 5.875 சதவீத வட்டியில் செலுத்த வேண்டியிருந்தது.

இலங்கைக்கு வழங்கிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் முழுத் தொகையையும் ஜூலை 25 ஆம் திகதிக்குள் வட்டியுடன் செலுத்துமாறு உத்தரவிடக் கோரியே ஹமில்டன் ரிசர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கு, ராஜபக்ஷ குடும்பத்தினர் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் திட்டமிட்டு ஏற்பாடு செய்ததாக செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸில் உள்ள ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது உள்ளூர் வங்கிகளின் இறையாண்மைப் பத்திரங்கள் குறித்து கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகவும் இது, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் வங்கிகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் வைத்திருக்கும் இறையாண்மைப் பத்திரங்கள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கப்பட்டதாக வங்கி குற்றம் சாட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.