மைசூர் தசரா விழா- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்..!!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இன்று தொடங்கி 2 நாட்கள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் ஒரு மாநிலத்துக்கு அவர் பயணம் செய்வது இதுவே முதல் முறை. முதல் நிகழ்ச்சியாக மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை இன்று குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். மேலும் ஹூபாலியில் பவுர சன்மனா விழாவில் கலந்து கொள்கிறார். தார்வாடில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார். செப்டம்பர் 27ந் தேதி, பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தி வசதியை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். அதன் தென் மண்டல நிறுவனத்திற்கு காணொலி மூலம் அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழக தொடக்க விழாவில் அவர்கலந்து கொள்கிறார். 28ந் தேதி குடியரசுத் தலைவர் புது தில்லி திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.