சார்ஜென்ட்டின் சாதுரியம்: கொள்ளையர்கள் கைது !!
தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாயை வைப்பிலிடச் சென்ற தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம், பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்கள் இருவரை, பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் மடக்கிப் பிடித்துள்ளார்.
கொள்ளையர்கள், சார்ஜென்ட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போதும் துப்பாக்கி வெடிக்கவில்லை என்று தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்களுடன் இடம்பெற்ற போராட்டத்தையடுத்து, சந்தேகநபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் வந்த குறித்த வர்த்தகர் வங்கிக்குள் நுழையும் போது அவரைத் தாக்கி, பணத்தை கொண்டு செல்ல கொள்ளையர்கள் முயன்றுள்ளனர்.
பணம் சிதறியதைக் கண்டு சுதாகரித்துக் கொண்ட பொலிஸ் சார்ஜென்ட் அவர்களை தடுக்க முற்பட்ட போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு அவர்கள் முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை.
எனினும், மிளகாப் பொடியால் பொலிஸ் சார்ஜென்டை தாக்க அவர்கள் முயற்சித்த போதும் கடும் பிரயத்தனம் மேற்கொண்ட சார்ஜென்ட் போராடியயைடுத்து ஆயுதங்களுடன் இருவரும் கைதுசெய்ய்ப்பட்டுள்ளனர்.