;
Athirady Tamil News

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு -கல்வித்துறை தகவல்..!!

0

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு எப்போது தொடங்கும்? அதற்கான விடுமுறை எப்போது விடப்படும்? என்பது தொடர்பான தகவல் பள்ளிக்கல்வியின் ஆண்டு நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் நாட்காட்டியில் காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பில் சில மாற்றங்களை செய்து கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மேலும் சில மாற்றங்களை செய்து, காலாண்டு விடுமுறையை நீட்டித்து அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈடுசெய்யும் விடுப்பு
காலாண்டு தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 30-ந்தேதி காலாண்டு தேர்வு முடிந்தவுடன், அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அடுத்த மாதம் 6, 7, 8 ஆகிய 3 நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும்.

எப்போது பள்ளிகள் திறப்பு?
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் கையாளும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் 10, 11, 12-ந்தேதிகளில் எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அடுத்த மாதம் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.