மது பாவனை தொடர்பான புதிய தகவல்!!
கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (27) மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.