யானைகளை விரட்ட 2,800 மில்லியன் ரூபாய் செலவு !!
காட்டு யானைகளை விரட்டுவதற்கு தேவையான வெடி மருந்துகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 2800 மில்லியன் ரூபாவை செலவிடுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது, அவற்றை விரட்ட வனவிலங்கு திணைக்களம் மக்களுக்கு இலவசமாக வெடி மருந்துகளை வழங்குவதுடன், இதற்காக வருடாந்தம் 14 இலட்சம் வெடி மருந்துகள் தேவைப்படுவதாகவும் இவை உள்ளூர் பட்டாசு தயாரிப்பாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக எதிர்காலத்தில் யானைகளைத் துரத்துவதற்குப் பயன்படும் வெடி மருந்துகளுக்கு தற்போதுள்ள தொகையை விட அதிக பணம் செலவிட நேரிடலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.