ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..!!
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி வழங்க வழிவகை செய்யும், பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது, குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அமலில் உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ், ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நீட்டிக்கப்பட்ட காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்கிழ் 80 கோடி மக்களுக்கு சுமார் 122 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.44762 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.