பேருந்து, மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் உயிரிழப்பு, 41 பேர் காயம்..!!
உத்தர பிரதேச மாநிலம் தௌர்ஹாராவில் இருந்து லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, நெடுஞ்சாலையில் உள்ள ஐரா பாலம் அருகே எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் லக்னோவை சேர்ந்தவர்கள். 41 பேர் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், லக்கிம்பூர் கேரி தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
எதிர் திசையில் இருந்து வேகமாக மினி லாரி வந்ததாகவும், மோதலை தடுக்க பஸ் ஓட்டுனர் முயன்ற போது, அதே திசையில் லாரி டிரைவரும் வாகனத்தை திரும்பியதால் விபத்து நிகழ்த்ததாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.