இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சாத்தியம்!!
இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 1465 பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதாகவும், பட்டியல் அண்மையில் 708 பொருட்களாக தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களின் கோரிக்கைகளை கருத்திற்க் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடு பட்டியலில் இருந்து பல பொருட்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”