சீன அதிபருக்கு எதிராக போராட்டம்: திபெத் மாணவர்கள் மீதான வழக்கு ரத்து..!!
சீன அதிபர் கடந்த 2019-ம் ஆண்டு மாமல்லபுரம் வந்தபோது. சென்னையில் படிக்கும் திபெத் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி டென்சிங் லுப்சங் உள்ளிட்ட 9 திபெத் மாணவர்கள், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் எந்த தவறும் செய்யாதவர்கள். சம்பவம் நடந்தபோது, அவர்கள் கல்லூரி மற்றும் விடுதி மூடிவிட்டதால் வீட்டில் இருந்தனர், அவர்களை வலுக்கட்டயமாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்” என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திபெத் மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.