;
Athirady Tamil News

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!!

0

யாழ்ப்பாணத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி 6 நாட்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி நாகர் கோவில் பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி தனுசியா (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.