இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிய பாதிப்பு 3,947 ஆக சரிவு..!!
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,947 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 4,272 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 87 ஆயிரத்து 307 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,096 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 19 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 1,167 குறைந்துள்ளது. அதாவது 39,583 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் கேரளாவில் 9 பேர் உள்பட மேலும் 18 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,629 ஆக உயர்ந்துள்ளது.