;
Athirady Tamil News

முதியோர்கள் சிறுவர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர்கள் -பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி!! (வீடியோ)

0

உலக சிறுவர் ,முதியோர் தினத்தை முன்னிட்டு கல்முனை சமூர்த்தி பிரதேச அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்டமுகாமையாளர் ஏ. ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இன்று (01)கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு முதியோர்கள் சிறுவர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களின் உரிமை எப்பொழுதும் பாதுகாக்கப்பட வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.

நிகழ்வின் ஆரம்பமாக வரவேற்ப்பு உரை சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, தலைமையுரை சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்டமுகாமையாளர் ஏ. ஆர்.எம்.சாலிஹ் மேற்கொண்டார்

பின்னர் கல்முனை சமாதன பாலர் பாடசாலை மாணவர்களின் நடனம் இடம்பெற்றதுடன்
மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.கல்முனை பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி உதவி பெறும் மிகவும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வலன்கி வைக்கப்பட்டதுடன்,

கல்முனை பிரதேச செயலக பிரிவில் நற்பிட்டிமுனை சமூர்தி வங்கி வலய பிரிவில் வசிக்கும் கலந்தர் உம்மா (97வயது), கல்முனை சமூர்த்தி வங்கி வலய பிரிவில் வசிக்கும் நெய்னா முகம்மது (86வயது), மருதமுனை சமூர்த்தி வங்கி வலய பிரிவில் வசிக்கும் பி.எம்.ஹிசாம் மதார்(73வயது) 03 முதியோர்கள் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா,கல்முனை சமூர்தி வங்கி முகாமையாளர் மோசஸ் புவிராஜ், நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளராக எம். ஏ. எம் .பைசால்,மருதமுனை சமூர்தி வங்கி வலய முகாமையாளர் ஏ.எல்.எம்.நஜீப், பிரதேச செயலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.றம்சான்,கல்முனை சமூர்தி வங்கி வலய உதவி முகாமையாளர்களான யூ.எல்.தௌபீக், ஐ.எல்.அர்சுத்தின்,பீ.எம்.இஸ்ஹாக்,சிரேஷ்ட சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்,என்.எம்.நௌசாத், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.ஹஸ்பியாபீவி,கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.சுசந்த கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள்,முதியோர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.