’ஊட்டச்சத்து குறைபாடு கதைகள் கடும் பொய்’ !!
சிற்சில நபர்கள் கூறுவதைப் போன்று நாட்டில் அதிகளவான ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
உணவுப் பணவீக்கம் காரணமாக ஒரு குடும்பத்தின் உணவு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர், இதன் மோசமான விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
உணவில் ஏற்பட்ட மாற்றங்களால், நாட்டு மக்களின் ஊட்டச்சத்து நிலை வீழ்ச்சியடைந்து, அதிக ஊட்டச்சத்து குறைபாடு திடீரென உருவானது என்பதை நம்ப முடியாது என்றும் 85 சதவீத ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய கதைகள் அப்பட்டமான பொய் என்றும் அவர் தெரிவித்தார்.