நுரைச்சோலை குறித்த முக்கிய அறிவிப்பு !!
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 3ஆம் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அலகு 1 மற்றும் அலகு 3 ஆகிய இரண்டும் முழு திறனில் இயங்குவதாக குறிப்பிட்ட அமைச்சர், 2ஆம் அலகின் பராமரிப்பு பணிகள் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.