;
Athirady Tamil News

யாழில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் நிகழ்வுகள்!! (PHOTOS)

0

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், யாழ் மாநகர பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் அரசியல் சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது காந்தீயம் ஏடு யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசனால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

மேலும் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடலும் மாணவர்களினால் இசைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.