யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை மாணவன் கைது!!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஊவா பல்கலை கழக மாணவனை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவனின் உடைமையில் இருந்து 750 மில்லி கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளதாகவும் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவராக பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட 52 வயதான நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.