செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரெயில்வே சாதனை..!!
இந்திய ரெயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவு செப்டம்பர் மாதத்திலேயே இதுவரை இல்லாத வகையில் 2022, செப்டம்பர் மாதத்தில் 115.80 மெட்ரிக் டன்னாக சாதனை படைத்துள்ளது. 2021 செப்டம்பர் மாதத்தை விட 9.15% வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 25 மாதங்களாக, ரெயில்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படும் சரக்குகளின் அளவு இதற்கு முன்பு இருந்ததை விட அதிகரித்து சாதனை புரிந்துள்ளது. 6.8 மெட்ரிக் டன் நிலக்கரி, அதைத்தொடர்ந்து 1.2 மெட்ரிக் டன் இரும்புத் தாது, 0.4 மெட்ரிக் டன் சிமெண்ட் மற்றும் க்ளிங்கர், 0.3 மெட்ரிக் டன் உரங்கள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி ரெயில்வே சாதனை படைத்துள்ளது. நிதியாண்டு 2022-23 இல் ரெயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் மற்றொரு சிறப்பம்சமாக அமைந்ததுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1575 ரேக்குகள் கொண்டு செல்லப்பட்டதுடன் ஒப்பிடுகையில், நிதியாண்டு 2022-23 இல் 2,712 ரேக்குகள் கொண்டு செல்லப்பட்டு, 72.2% வளர்ச்சியைப் பதிவு செய்தன. ஏப்ரல் 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை ரெயில்களில் கொண்டு செல்லப்பட்ட மொத்த சரக்குகளின் அளவு 736.68 மெட்ரிக் டன் ஆகும். இது 2021-22 இன் அளவான 668.86 மெட்ரிக் டன்னை விட 10.14% அதிகம்.