;
Athirady Tamil News

’’ரணிலுக்கு உலகமே அஞ்சுகிறது’’ – வஜிர!!

0

சர்வதேச அமைப்புகளின் நோக்கங்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அதிர்ஷ்டவசமாக உலகையே எதிர்த்துப் போராடக் கூடிய தலைவர் ஜனாதிபதியாகிவிட்டார்” என்று கூறிய அவர், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையின் குடிமக்கள் குறிப்பாக அரசியல் குழுக்களில் செல்வாக்கு செலுத்த வேண்டும். அவர்கள் விரும்பியபடி நடந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. இலங்கை மக்கள் அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டத்தில் உடன்படுமாறு தொடர்ந்து கூற வேண்டும்.

அதற்குத் தேவையான தலைமைத்துவம் இலங்கைக்கு இப்போது கிடைத்துள்ளது. அதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இவரைக் கண்டால் உலக நாடுகள் அச்சம் கொள்கின்றன.

சர்வதேச சமூகம் எப்பொழுதும் எமது நாட்டை பலவீனமான நிலைக்கு தள்ளவே முயற்சிக்கின்றது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அதைச் செய்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது போல் 2048ஆம் ஆண்டுக்குள் இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த முடியும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.