நள்ளிரவு முதல் மீண்டும் கட்டண உயர்வு !!
இலங்கையிலுள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், இன்று (05) நள்ளிரவு முதல் தங்களது சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
கடந்த 1ஆம் திகதி முதல் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுல்படுத்தப்பட்ட காரணத்தினால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
12 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருடாந்த வருமானத்தைப் பெறும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 2.5 சதவீத வரியை சேர்க்கும் போது, முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணப் பொதிகள் திருத்தப்படவுள்ளதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
புதிய கட்டணங்கள் குறித்த விவரங்களை தங்களது அதிகாரபூர்வ இணையதளங்களில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.