வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு!! (PHOTOS )
வவுனியா கோமரசங்குளம் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் சி.வரதராஜா தலைமையில் இன்று (06) நடைபெற்றது.
பாடசாலையின் சோமசுந்தரம் ஞாபகர்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் கலந்துகொண்டிருந்தார்.
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனத்தை தொடர்ந்து ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர், இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஸ்ணன் ஆசிரியர்களை கொரவிக்கும் முகமாக எடுத்த முயற்சியின் காரணமாக அதை ஏற்றுக்கொண்ட இந்திய அரசானது ஆசிரியர் தினத்தை அறிவித்தது, உலக ஆசிரியர் தினம் 1966 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. என தெரிவித்தார்.
பாடசாலையின் ஆசிரியர்களை கொளரவிக்கும் முகமாக, நினைவுச் சின்னமாக அதிதிகளால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஆசிரியர்களின் கோலாட்டம், மாணவர்களின் நடனம், குழப்பாடல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,
இலங்கை நாட்டிலே தமிழர்கள் தலைநிமிர்ந்து வாள வேண்டுமானால் முதலாவது கல்வியிலே சிறந்து விளங்கும் சமுதாயமாக விளங்க வேண்டும். அத்துடன் பொருளாதார பிரச்சனையை எதிர்கோள்ள வேண்டுமானால் தற்சார்பு பொருளாதாரத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.