36 ஆவது பொதுப்பட்டமளிப்பு – இரண்டாம் நாள்…!! (படங்கள்)
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் – நான்காவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். இன்றைய அமர்வில், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பதிவாளர் வி.காண்டீபன், நிதியாளர் கே. சுரேஸ்குமார், பதில் நூலகர் எஸ்.கேதீஸ்வரன் மற்றும் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விருந்தினர்கள், பட்டம் பெறும் மாணவர்களின் சார்பில் அழைக்கப்பட்ட பெற்றோர் – விருந்தினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
நேற்று 06 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை வரை மூன்று நாள்களில் எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர். இன்று இரண்டாம் நாள் இடம்பெறவுள்ள நான்காம், ஐந்தாம், ஆறாம் அமர்வுகளில் ஆயிரத்து 192 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”