“ராகுல்காந்தி காங்கிரசை ஒற்றுமைப்படுத்தும் யாத்திரையை தொடங்க வேண்டும்” – உத்தரபிரதேச பா.ஜ.க. தலைவர் பேச்சு..!!
உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் பூபேந்திரசிங் சவுத்ரி, அங்குள்ள பல்லியா பகுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கிய பிறகு, ராஜஸ்தானிலும், இதர மாநிலங்களிலும் காங்கிரசில் உட்கட்சி மோதல்கள் வெடித்துள்ளன. எனவே, அவர் ‘காங்கிரசை ஒற்றுமைப்படுத்தும் யாத்திரையை’ தொடங்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா பிரிவினையை சந்தித்தது. அதன்பிறகு எந்த பிரிவினையும் நடக்கவில்லை. எனவே, ராகுல்காந்தி தனது யாத்திரையை பாகிஸ்தானில் உள்ள பெஷாவரிலோ, கராச்சியிலோ அல்லது இஸ்லாமாபாத்திலோ இருந்து தொடங்கி இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.