வல்வெட்டித்துறையில் மோட்டார் சைக்கிள் திருடி பருத்தித்துறையில் தங்க நகை வழிப்பறி – நேற்று மாலை சம்பவம்!!
வல்வெட்டித்துறையில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பருத்தித்துறையில் பெண் ஒருவரின் தங்க சங்கிலி வழிப்பறிக் கொள்ளையிட்ட சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான என்எஸ் பல்சர் மோட்டார் சைக்கிள் நேற்று மாலை திருடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதே மோட்டார் சைக்கிளினை பயன்படுத்தி பயணித்த இருவர், நேற்று மாலை பருத்தித்துறை திக்கம் பகுதியில் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரித்துத் தப்பித்தனர்.
அத்துடன் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை ஆகிய இருவேறு இடங்களில் வழிப்பறி கொள்ளைக்கு முற்பட்ட போதும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சாதூரியமாகச் செயற்பட்டதால் கொள்ளையர்கள் தப்பித்துள்ளனர்.
இந்த திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.