யாழில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த வவுனியா வாசி கைது!!
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்றும், சந்தேக நபரிடமிருந்து 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 3 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”