;
Athirady Tamil News

சாவர்க்கர் தேசபக்தியை இழிவு படுத்துவது மனிதாபிமானமற்றது- ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பேச்சு..!!

0

சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித் தொகை பெற்றதாகவும், அவை வரலாற்று உண்மை என்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளதாவது: இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே புரட்சியாளர் சாவர்க்கர் மட்டுமே.

அவர் சித்திரவதைகள் நிறைந்த சிறை தண்டனையை அனுபவித்தார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் நிம்மதியாக கழித்தனர். எனவே, (அவரது ) தேசபக்தியை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது, மனிதாபிமானமற்றது. உங்களால் அவரை மதிக்க முடியாவிட்டால், அவரை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் அனைத்து சாதியினரும் மதிக்கப்படுகிறார்கள்.

தீண்டாமை என்பது அதர்மம், பாவம். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னாவை பேச்சுவார்த்தை நடத்துமாறு மகாத்மா காந்தி தெரிவிக்கவில்லை.அப்படி நடத்தியிருந்தால் நாடு பிரிக்கப்பட்டிருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.