;
Athirady Tamil News

யாழில் தொடர் மழை: நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சி!!

0

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் (09.10.2022), இன்று திங்கட்கிழமையும்(10.10.2022) தொடர் மழை பெய்துள்ளது.

நேற்று அதிகாலை-3.30 மணி முதல் முற்பகல்-11.00 மணி வரையும், இன்று அதிகாலை முதல் காலை-9.30 மணி வரையும் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது. தொடர் மழைவீழ்ச்சி காரணமாகத் தாழ்நிலப் பகுதிகளிலும், வீதிகளிலும் வெள்ளநீரை அவதானிக்க முடிகிறது.

இதேவேளை, நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை-8.30 மணி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை-8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் யாழ்.நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சியாக 63.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

குறித்த காலப் பகுதியில் அச்சுவேலியில் 43.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 30.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.