அடுத்த வருடமே ஆபத்து உள்ளது !!
பணவீக்கம் தொடர்ந்து பிரச்சினையாக இருப்பதால், உலகளாவிய மந்தநிலையின் அபாயம் அதிகரித்து வருகிறது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஆகியோர் தெரிவித்துள்ளனர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னரே பணவீக்கம் பிரச்சினையாக உள்ளதாகவும் அடுத்த வருடம் உலக மந்தநிலையின் அபாயம் மற்றும் உண்மையான ஆபத்து உள்ளது என்றும் குறிப்பிட்டுள்னனர்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தொடரின் ஆரம்பத்தில், ஜோர்ஜீவாவுடனான உரையாடலில் மல்பாஸ் மந்த நிலை பற்றிக் குறிப்பிட்டார்.
முன்னேறிய பொருளாதாரங்களில் மந்தமான வளர்ச்சி மற்றும் பல வளரும் நாடுகளில் நாணயத் தேய்மானம் ஆகியவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவில் நாணய நிதியம் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையை கண்டதாக ஜோர்ஜீவா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.