மேற்கு வங்காளம்: இரு சமூக மோதலில் மத கொடி கிழிப்பு; 144 தடை உத்தரவு அமல்..!!
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் மொமின்பூர் என்ற இடத்தில் ஏகபலபூர் பகுதியில் மிலாது-உன்-நபி பண்டிகையின்போது இரு வெவ்வேறு சமூகத்தினரில், திடீரென இரு குழுக்கள் ஒருவருடன் ஒருவர் மோதி கொண்டனர். இந்த மோதலில் மத கொடி ஒன்று கிழிந்துள்ளது. இந்த சம்பவம் எதிரொலியாக, குழுக்களில் ஒரு பிரிவினர் ஏகபலபூர் காவல் நிலையத்திற்கு சென்று, மத கொடியை கிழித்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி, மாநில கவர்னர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், சமூக மோதலை கட்டுப்படுத்த, மத்திய படைகளை அனுப்பி மேற்கு வங்காளத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இந்த சூழலில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஏகபலபூர் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.