விசர் நாயைப் போல பொலிஸாரை இயக்குவது யார்?
பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமிருந்தாலும் விசர் நாய்களைப் போல பொலிஸாரை இயக்குவது யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
அரசியல்வாதிகளின் கைபொம்மையாக பொலிஸார் நடந்துக்கொள்ளக்கூடாது. பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் பொலிஸார் செயற்படக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.